திங்கள், 14 ஜனவரி, 2013

என் கவிதை பக்கம்

என் கவிதை பக்கம்

  என் கவிதை பக்கத்துக்கு உங்கள் 
அனைவரையும் வருக! வருக! என வரவேற்கிறேன்.

             இந்த "பூ" உலகில் நாணும் உங்களை போல் தட்டுத்தடுமாறி கடந்து வந்த பாதையில் ஏற்பட்ட காயங்களும்,பாசங்களும் ,உங்களை  போன்ற அன்பு நண்பர்களின் உறவுகளும் என்  நினைவுகளாக   ஏற்பட்ட வரிகள் தான் இந்தக்கவிதைகள்.........................


என்றும் உங்கள் நண்பனாக!...

ச.இராமகிருஸ்ணன்.



கடவுள்

         கடவுள்!.. யாருக்கு யார் கடவுள்
                     கண்ணுக்கு கண் இமை கடவுள்!.
காதுக்கு காதொலி கடவுள்!
       மூக்குக்கு மூச்சு கடவுள்!
வாய்க்கு வாக்கு கடவுள்!
உடம்புக்கு  உடை கடவுள்!
மனிதா உனக்கு கடவுள்!
உன் பெற்றோர்கள் தான்!...


இறைவா நான் இறக்கும் வரை இதயம் முழுவதும் நீதான்!....


வாழ்க்கை

 அன்பு எனும் ஊற்றாய்!
ஆசை எனும் கிணறாய்!
பாசம் எனும் பாசானாய்!
வாழ்க்கை எனும் நீராய்!
நீடு வாழ்வோம்!..
நீண்ட புகழடைவோம்!.....


வரதட்சனை

வரன்  என்பது திருமணமாம்!..
தா  என்பது தருவதாம்..
இட்சனை என்பது இழிவான பொருளாம்..
இம்மூன்றையும் பெற மனிதா நீ என்ன?
பிச்சை காரணா? அல்ல இச்சைகாரணா?..................

தீண்டாமை

 தீயாக நீ இருக்க!...
ஆமையாக நான் இருக்க!...
நீ சுடவே!.. நான் அழிகிறேன்...
தீயே!.. நீ அழிவது எப்போது.......

மாசு

மண்ணை கெடுப்பது மாசு!.
காற்றை கெடுப்பது மாசு!.
மழையைக் கெடுப்பது மாசு!.
இயற்க்கையைக் கெடுப்பது மாசு!
இவையனைத்தையும் கெடுப்பது..
மாசாகிய மனிதா நீயடா!.............

சாருவின் சாரல்!...

தொட்டவுடன் சிளிர்க்குதடி!
பனிச் சாரல்!...
பட்டவுடன் குளிருதடி!
மழை சாரல்!...
முத்தம்மிட்டவுடன் இனிக்குதடி!
கரும்புச் சாரல்!..
உன்னைநினைத்தே துடிக்குதடி!
சரு!...உன் சாரல்!...

மரணம்

தூண்டியில்  சிக்கிய மீனுக்கோ!..
அன்றே மரணம்!....
காதலில் சிக்கிய எனக்கோ!..
தினம் தினம் மரணம்!....

மதியே!...

உன்னை நினைக்கும் போதெல்லாம்
என் நெஞ்சம் துடிக்குதடி!.
உன்னை பார்க்கும் போதெல்லாம்
என் மனம் படபடக்குதடி!..
உன்னை தொடும் போதெல்லாம்
என் உடல் சிளிர்க்குதடி!...
வெண்மதியே!. என்மதியே!..

சங்கீதமே!..

கீதங்கள் இசைபாடும்
என்னவளின் குரல் கேட்டு!..
தாஜ்-ஜாலும் பின்னோக்கும்
என்னவளின் அழகை பார்த்து!..
மதுவும் மயன்கிபோகும்
என்னவளின் புன்னைகைக்கு!..
தாயன்பும் தரிகெட்டோடும்
என்னவளின் பாசத்திற்க்கு!..
என்றுமே அந்த என்னவள் 
என் சங்கீதமே!..

சங்கீதா!..

சாரல் மழையும் அமிர்தம்
உந்தன் உடலில்  பட்டு!.. 
ங் கணமே இறந்து விட ஆசை
உந்தன் மடியில் சாய்ந்து!..
கீதங்கள் அலைபாயும்
உந்தன் குரல் கேட்டு!...
தாமரை முகமே!
மல்லிகை மனமே!.. வாழ்க!............


என் கவிதை!...

ச.இராமகிருஷ்ணன்



   








கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக