வெள்ளி, 8 பிப்ரவரி, 2013

ஆதாயம் தரும் வழிகள்


ஆதாயம் தரும் வழிகள்( Sourch of  Income)



ஆதாயம் தரும் வழிகள்

SOURCH OF INCOME

முகப்பு

  "ஆதாயம்" ஈட்ட ஆயிரம் வழிகள் இருக்கலாம் ஆனால் நாம் செய்யும் செலவினங்களில் இருந்து ஈட்ட முற்பட்டு நான் ஆராய்ந்த சில வழிகள் இவை...

வழிகள்: 1

   இன்று நம் தமிழக அரசு பள்ளி தோரும், கல்லுரிகள் தோரும் விலையில்லா மடிக்கணினி திட்டம் மிகவும் சிறப்பாக செயல் படுத்திவருவதை அனைவரும் அறிவர்.
இவ்வாறு நம் அரசு வழங்கிவரும் மடிக்கணினி திட்டம் உண்மையில் மாணவர்கள் அதனை சரியாக பயன்படுத்த தவறிவிட்டனர் இத்திட்டத்தில் 95% மாணவர்கள் மற்றும் மாணவிகள் வெறும் பாடல் கேக்கவும் படம் பார்க்க மட்டும் பயன்படுத்துவது மிகவும் வருத்தம் மளிக்கிறது இதற்க்கு தீர்வுகான முற்பட்டு ஆராய்ந்த என் தீர்வு இதோ!...

மடிக்கணினிக்கு பதில் கையடக்ககணினி:



LAPTOP  இருந்து  TABLET 




    பல ஆயிரம் கோடி இழப்பு ஏற்படும் இந்த திட்டம் சிறப்பான முறையில் மக்களை சென்றடைய அரசு மடிக்கணினிக்கு பதில் கையடக்ககணினி வழங்கலாம் இதனால் அரசுக்கு சுமார் 90% பணம் மிச்சம் ஆவதுடன் கணினி திட்டமும் மிகவும் சிறப்பாகவும் செம்மையாகவும்  நடைமுறை படுத்தமுடியும் இவ்வாறு மடிக்கணினிக்கு பதில் கையடக்ககணினி பயன்படுத்துவதால் மாணவர்களுக்கு கற்பிக்க தேவையான பாடநூல்கள் மற்றும் விளக்க படங்கள் போன்றவற்றை பதிவேற்றம் செய்து அவர்களின் கல்விக்கும் சிறந்த கருவியாக இந்த கையடக்ககணினி பயன்படும் என்பதில் எந்த அய்யமும் இல்லை..


கையடக்ககணினியின் பயன்கள்:

1. விலை குறைவு ஆனால் பலன் அதிகம்
2. மாணவர்கள் பாடல் மற்றம் படம் போன்ற தேவையில்லாத செயல்களை தவிர்க்க முடியும்.
3. விலை குறைவு என்பதால் அரசுக்கு சுமார் 90% பணம் மிச்சம்.
4. திட்டம் சிறப்பாக செயல்படுத்துவதுடன் மக்கள் மத்தியில் மதிப்பு உயரும்.
5. கல்வி மற்றும் மாணவர்களின் தொழில்நுப்பறிவு வளரும்.
6. இணையதளம் போன்ற உலக அளவில் கணினியறிவு மாணவர்களுக்கு வளரும்.


வழிகள்:  2


இருந்து 


  
     மத்திய அரசு மண்ணென்யை போன்ற எரிவாயு பொருட்களின் விலையை ஏற்றிவரும் பட்ச்சத்தில் மக்களுக்கு வழங்கும் எண்ணெனையின் அளவையும் குறைத்து வருகிறது இப்படி இருக்க மாநில அரசு சிறந்த மேலாண்மை தர முற்படும் போது மக்கள் மத்தியில் வீழ்ச்சியும் அவப்பெயரும் ஏற்படுகிறது இதை தவிர்க்க அரசு தமிழகத்தில் உள்ள எரிவாயு முகவர்கள் மூலம் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு ஒரு எரிவாயு உருளையில் இருந்து இரண்டு எரிவாயு வழங்களாம் அல்லது எரிவாயு முகவர்கள் தங்கள் வாடிக்கையாளர்களின் விவரங்களை தற்சமயம் இணையதளம் மூலம் இணைத்துள்ளனர் அதை அரசு குடும்ப அட்டைதாரர்களின் விவரங்களுடன் இனைத்தால் சுமார் 25% மண்ணென்னையை குறைக்கமுடியும் அல்லது எரிவாயு முகவர்களுக்கு அரசின் குடும்ப அட்டைதாரர் விவரம் கொண்ட இணையதளத்தில் தங்கள் வாடிக்கையாளர்களின் குடும்ப அட்டை விரங்களை முகவர்களுக்கெண்று தனி நுளைவு(user id and password) ஒன்றை அமைத்து அதன் மூலம் அனைத்து எரிவாயு வாடிக்கையாளர்களின் விவரங்களை உடனுக்குடன் அறியமுடிவதுடன் அரசுவழங்கும் மண்ணெண்னை திட்டம் ஏழை எளியவர்களுக்கு முறையாக செலுத்த வழிவகை செய்யும்.

இத்திட்டதின்பயங்கள்:

1. முகவர்கள் மற்றும் எரிவாயுபெறும் வாடிக்கையாளர்கள் விவரம் அறியமுடியும்.
2. சுமார் 20 முதல் 30 விழுக்காடு மண்ணெண்னை தேவையின் அளவு குறையும்.
3. அரசின் செலவு குறைவதுடன் திட்டமும் சரியான பயனாளர்களுக்கு சென்றடையும்.



வழிகள்: 3


      ராஜிவ் காந்தி விக்ரம் (rgls) என்ற எரிவாயு முகவர் திட்டம் மூலம் மத்திய அரசு எரிவாயு முகவர்களை கொண்டு மக்களுக்கு எரிவாயு வழங்கி வருகிறது இதில் முக்கிய அங்கம் என்ன தெரியுமா!.. வாடிக்கையாளர்கள் எரிவாயு முகவர் இடத்திற்க்கு சென்று தங்களுக்கு தேவையான எரிவாயுவை பணம் செலுத்தி பெற்றுக்கொள்ள வேண்டும். இப்படிபட்ட திட்டத்தை தமிழக அரசு தன்வசம் ஏற்று ஊர் தோரும் எரிவாயு முகவர் சேவையை ஏற்படுத்தி தமிழகத்தில் மக்களுக்கு சேவையும் அதேசமயம் ஆதாயமும் பெற இத்திட்டம் வழிவகை செய்யும். இத்திட்டத்தை செயல்படுத்த ஒரு முகவருக்கு சுமார் 3 முதல் 4 லட்சம் ரூபாய் செலவு ஆகும் ஆனால் அத்தொகை முழுவதையும் ஒரே ஆண்டில் ஆதாயமாக பெருவதுடன் மக்கள் மத்தியில் நற்பெயரும் உருவாகும்.

இத்திட்டதின்பயங்கள்:

1. அரசிற்க்கு ஆண்டு ஒன்றுக்கு சுமார் 5 முதல் 6 லட்சம் வரை வருமானம் ஈட்டமுடியும்.
2. செலவு குறைவு ஆனால் ஆதாயம் மிக அதிகம்.
3. மக்கள் மத்தியில் நற்பெயரும் அரசின் மிதான நம்பிக்கையும் உயரும்.


வழிகள்: 4





         நகர்புறங்கள் மற்றும் முக்கிய சாலைகளில் உள்ள அரசிற்க்கு சொந்தமான நிலபரப்புகளை அரசு அடையாளம் கண்டு அந்த நிலபரப்புகளில் வாணிபகட்டிடங்கள் போன்றவற்றை எழுப்பி அதன் மூலம் வாடகைக்கு விடலாம் அல்லது அரசே வணிக கட்டிடங்களை அமைத்து அதன்மூலம் வாணிபம் செய்ய முற்படுவதும் ஒருவகையில் வருமானம் தரும் என்பது என் கருத்து.

இத்திட்டதின்பயங்கள்:

1. இவ்வாறு அரசு வாணிபகட்டிடங்கள் எழுப்புவதால் மாதம் வாடகை கிடைக்கும்.
2.முக்கிய வீதிகள் மற்றும் தெருகளில் பயனற்று கிடக்கும் நிலபகுதி பயனுள்ளதாகும்.
3. பிற்காலத்தில் இந்த வாணிப மையங்கள் அரசுக்கு பயன் தரும் வகையில் மாற்றிகொள்ளவும் இயலும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக