வெள்ளி, 8 பிப்ரவரி, 2013

ஆதாயம் தரும் வழிகள்


ஆதாயம் தரும் வழிகள்( Sourch of  Income)ஆதாயம் தரும் வழிகள்

SOURCH OF INCOME

முகப்பு

  "ஆதாயம்" ஈட்ட ஆயிரம் வழிகள் இருக்கலாம் ஆனால் நாம் செய்யும் செலவினங்களில் இருந்து ஈட்ட முற்பட்டு நான் ஆராய்ந்த சில வழிகள் இவை...

வழிகள்: 1

   இன்று நம் தமிழக அரசு பள்ளி தோரும், கல்லுரிகள் தோரும் விலையில்லா மடிக்கணினி திட்டம் மிகவும் சிறப்பாக செயல் படுத்திவருவதை அனைவரும் அறிவர்.
இவ்வாறு நம் அரசு வழங்கிவரும் மடிக்கணினி திட்டம் உண்மையில் மாணவர்கள் அதனை சரியாக பயன்படுத்த தவறிவிட்டனர் இத்திட்டத்தில் 95% மாணவர்கள் மற்றும் மாணவிகள் வெறும் பாடல் கேக்கவும் படம் பார்க்க மட்டும் பயன்படுத்துவது மிகவும் வருத்தம் மளிக்கிறது இதற்க்கு தீர்வுகான முற்பட்டு ஆராய்ந்த என் தீர்வு இதோ!...

மடிக்கணினிக்கு பதில் கையடக்ககணினி:LAPTOP  இருந்து  TABLET 
    பல ஆயிரம் கோடி இழப்பு ஏற்படும் இந்த திட்டம் சிறப்பான முறையில் மக்களை சென்றடைய அரசு மடிக்கணினிக்கு பதில் கையடக்ககணினி வழங்கலாம் இதனால் அரசுக்கு சுமார் 90% பணம் மிச்சம் ஆவதுடன் கணினி திட்டமும் மிகவும் சிறப்பாகவும் செம்மையாகவும்  நடைமுறை படுத்தமுடியும் இவ்வாறு மடிக்கணினிக்கு பதில் கையடக்ககணினி பயன்படுத்துவதால் மாணவர்களுக்கு கற்பிக்க தேவையான பாடநூல்கள் மற்றும் விளக்க படங்கள் போன்றவற்றை பதிவேற்றம் செய்து அவர்களின் கல்விக்கும் சிறந்த கருவியாக இந்த கையடக்ககணினி பயன்படும் என்பதில் எந்த அய்யமும் இல்லை..


கையடக்ககணினியின் பயன்கள்:

1. விலை குறைவு ஆனால் பலன் அதிகம்
2. மாணவர்கள் பாடல் மற்றம் படம் போன்ற தேவையில்லாத செயல்களை தவிர்க்க முடியும்.
3. விலை குறைவு என்பதால் அரசுக்கு சுமார் 90% பணம் மிச்சம்.
4. திட்டம் சிறப்பாக செயல்படுத்துவதுடன் மக்கள் மத்தியில் மதிப்பு உயரும்.
5. கல்வி மற்றும் மாணவர்களின் தொழில்நுப்பறிவு வளரும்.
6. இணையதளம் போன்ற உலக அளவில் கணினியறிவு மாணவர்களுக்கு வளரும்.


வழிகள்:  2


இருந்து 


  
     மத்திய அரசு மண்ணென்யை போன்ற எரிவாயு பொருட்களின் விலையை ஏற்றிவரும் பட்ச்சத்தில் மக்களுக்கு வழங்கும் எண்ணெனையின் அளவையும் குறைத்து வருகிறது இப்படி இருக்க மாநில அரசு சிறந்த மேலாண்மை தர முற்படும் போது மக்கள் மத்தியில் வீழ்ச்சியும் அவப்பெயரும் ஏற்படுகிறது இதை தவிர்க்க அரசு தமிழகத்தில் உள்ள எரிவாயு முகவர்கள் மூலம் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு ஒரு எரிவாயு உருளையில் இருந்து இரண்டு எரிவாயு வழங்களாம் அல்லது எரிவாயு முகவர்கள் தங்கள் வாடிக்கையாளர்களின் விவரங்களை தற்சமயம் இணையதளம் மூலம் இணைத்துள்ளனர் அதை அரசு குடும்ப அட்டைதாரர்களின் விவரங்களுடன் இனைத்தால் சுமார் 25% மண்ணென்னையை குறைக்கமுடியும் அல்லது எரிவாயு முகவர்களுக்கு அரசின் குடும்ப அட்டைதாரர் விவரம் கொண்ட இணையதளத்தில் தங்கள் வாடிக்கையாளர்களின் குடும்ப அட்டை விரங்களை முகவர்களுக்கெண்று தனி நுளைவு(user id and password) ஒன்றை அமைத்து அதன் மூலம் அனைத்து எரிவாயு வாடிக்கையாளர்களின் விவரங்களை உடனுக்குடன் அறியமுடிவதுடன் அரசுவழங்கும் மண்ணெண்னை திட்டம் ஏழை எளியவர்களுக்கு முறையாக செலுத்த வழிவகை செய்யும்.

இத்திட்டதின்பயங்கள்:

1. முகவர்கள் மற்றும் எரிவாயுபெறும் வாடிக்கையாளர்கள் விவரம் அறியமுடியும்.
2. சுமார் 20 முதல் 30 விழுக்காடு மண்ணெண்னை தேவையின் அளவு குறையும்.
3. அரசின் செலவு குறைவதுடன் திட்டமும் சரியான பயனாளர்களுக்கு சென்றடையும்.வழிகள்: 3


      ராஜிவ் காந்தி விக்ரம் (rgls) என்ற எரிவாயு முகவர் திட்டம் மூலம் மத்திய அரசு எரிவாயு முகவர்களை கொண்டு மக்களுக்கு எரிவாயு வழங்கி வருகிறது இதில் முக்கிய அங்கம் என்ன தெரியுமா!.. வாடிக்கையாளர்கள் எரிவாயு முகவர் இடத்திற்க்கு சென்று தங்களுக்கு தேவையான எரிவாயுவை பணம் செலுத்தி பெற்றுக்கொள்ள வேண்டும். இப்படிபட்ட திட்டத்தை தமிழக அரசு தன்வசம் ஏற்று ஊர் தோரும் எரிவாயு முகவர் சேவையை ஏற்படுத்தி தமிழகத்தில் மக்களுக்கு சேவையும் அதேசமயம் ஆதாயமும் பெற இத்திட்டம் வழிவகை செய்யும். இத்திட்டத்தை செயல்படுத்த ஒரு முகவருக்கு சுமார் 3 முதல் 4 லட்சம் ரூபாய் செலவு ஆகும் ஆனால் அத்தொகை முழுவதையும் ஒரே ஆண்டில் ஆதாயமாக பெருவதுடன் மக்கள் மத்தியில் நற்பெயரும் உருவாகும்.

இத்திட்டதின்பயங்கள்:

1. அரசிற்க்கு ஆண்டு ஒன்றுக்கு சுமார் 5 முதல் 6 லட்சம் வரை வருமானம் ஈட்டமுடியும்.
2. செலவு குறைவு ஆனால் ஆதாயம் மிக அதிகம்.
3. மக்கள் மத்தியில் நற்பெயரும் அரசின் மிதான நம்பிக்கையும் உயரும்.


வழிகள்: 4

         நகர்புறங்கள் மற்றும் முக்கிய சாலைகளில் உள்ள அரசிற்க்கு சொந்தமான நிலபரப்புகளை அரசு அடையாளம் கண்டு அந்த நிலபரப்புகளில் வாணிபகட்டிடங்கள் போன்றவற்றை எழுப்பி அதன் மூலம் வாடகைக்கு விடலாம் அல்லது அரசே வணிக கட்டிடங்களை அமைத்து அதன்மூலம் வாணிபம் செய்ய முற்படுவதும் ஒருவகையில் வருமானம் தரும் என்பது என் கருத்து.

இத்திட்டதின்பயங்கள்:

1. இவ்வாறு அரசு வாணிபகட்டிடங்கள் எழுப்புவதால் மாதம் வாடகை கிடைக்கும்.
2.முக்கிய வீதிகள் மற்றும் தெருகளில் பயனற்று கிடக்கும் நிலபகுதி பயனுள்ளதாகும்.
3. பிற்காலத்தில் இந்த வாணிப மையங்கள் அரசுக்கு பயன் தரும் வகையில் மாற்றிகொள்ளவும் இயலும்.

திங்கள், 14 ஜனவரி, 2013

என் கவிதை பக்கம்

என் கவிதை பக்கம்

  என் கவிதை பக்கத்துக்கு உங்கள் 
அனைவரையும் வருக! வருக! என வரவேற்கிறேன்.

             இந்த "பூ" உலகில் நாணும் உங்களை போல் தட்டுத்தடுமாறி கடந்து வந்த பாதையில் ஏற்பட்ட காயங்களும்,பாசங்களும் ,உங்களை  போன்ற அன்பு நண்பர்களின் உறவுகளும் என்  நினைவுகளாக   ஏற்பட்ட வரிகள் தான் இந்தக்கவிதைகள்.........................


என்றும் உங்கள் நண்பனாக!...

ச.இராமகிருஸ்ணன்.கடவுள்

         கடவுள்!.. யாருக்கு யார் கடவுள்
                     கண்ணுக்கு கண் இமை கடவுள்!.
காதுக்கு காதொலி கடவுள்!
       மூக்குக்கு மூச்சு கடவுள்!
வாய்க்கு வாக்கு கடவுள்!
உடம்புக்கு  உடை கடவுள்!
மனிதா உனக்கு கடவுள்!
உன் பெற்றோர்கள் தான்!...


இறைவா நான் இறக்கும் வரை இதயம் முழுவதும் நீதான்!....


வாழ்க்கை

 அன்பு எனும் ஊற்றாய்!
ஆசை எனும் கிணறாய்!
பாசம் எனும் பாசானாய்!
வாழ்க்கை எனும் நீராய்!
நீடு வாழ்வோம்!..
நீண்ட புகழடைவோம்!.....


வரதட்சனை

வரன்  என்பது திருமணமாம்!..
தா  என்பது தருவதாம்..
இட்சனை என்பது இழிவான பொருளாம்..
இம்மூன்றையும் பெற மனிதா நீ என்ன?
பிச்சை காரணா? அல்ல இச்சைகாரணா?..................

தீண்டாமை

 தீயாக நீ இருக்க!...
ஆமையாக நான் இருக்க!...
நீ சுடவே!.. நான் அழிகிறேன்...
தீயே!.. நீ அழிவது எப்போது.......

மாசு

மண்ணை கெடுப்பது மாசு!.
காற்றை கெடுப்பது மாசு!.
மழையைக் கெடுப்பது மாசு!.
இயற்க்கையைக் கெடுப்பது மாசு!
இவையனைத்தையும் கெடுப்பது..
மாசாகிய மனிதா நீயடா!.............

சாருவின் சாரல்!...

தொட்டவுடன் சிளிர்க்குதடி!
பனிச் சாரல்!...
பட்டவுடன் குளிருதடி!
மழை சாரல்!...
முத்தம்மிட்டவுடன் இனிக்குதடி!
கரும்புச் சாரல்!..
உன்னைநினைத்தே துடிக்குதடி!
சரு!...உன் சாரல்!...

மரணம்

தூண்டியில்  சிக்கிய மீனுக்கோ!..
அன்றே மரணம்!....
காதலில் சிக்கிய எனக்கோ!..
தினம் தினம் மரணம்!....

மதியே!...

உன்னை நினைக்கும் போதெல்லாம்
என் நெஞ்சம் துடிக்குதடி!.
உன்னை பார்க்கும் போதெல்லாம்
என் மனம் படபடக்குதடி!..
உன்னை தொடும் போதெல்லாம்
என் உடல் சிளிர்க்குதடி!...
வெண்மதியே!. என்மதியே!..

சங்கீதமே!..

கீதங்கள் இசைபாடும்
என்னவளின் குரல் கேட்டு!..
தாஜ்-ஜாலும் பின்னோக்கும்
என்னவளின் அழகை பார்த்து!..
மதுவும் மயன்கிபோகும்
என்னவளின் புன்னைகைக்கு!..
தாயன்பும் தரிகெட்டோடும்
என்னவளின் பாசத்திற்க்கு!..
என்றுமே அந்த என்னவள் 
என் சங்கீதமே!..

சங்கீதா!..

சாரல் மழையும் அமிர்தம்
உந்தன் உடலில்  பட்டு!.. 
ங் கணமே இறந்து விட ஆசை
உந்தன் மடியில் சாய்ந்து!..
கீதங்கள் அலைபாயும்
உந்தன் குரல் கேட்டு!...
தாமரை முகமே!
மல்லிகை மனமே!.. வாழ்க!............


என் கவிதை!...

ச.இராமகிருஷ்ணன்   
சனி, 22 டிசம்பர், 2012

முகப்பு

அனைவருக்கும் என் மனமார்ந்த வணக்கம்
"தொப்புள் கொடி  உறவுகள்  போல்
                   என் இதய  துடிப்புகளான நட்புகளோடு கடல் அலையாய்,மழை துளியாய்
                    உங்கள் மனதில் நனைந்து இருக்கும்"
      
                                                     உங்கள்,
                                               
                                                      6K.
                                                        www.ramakrishnan.do.am


Tamil Nadu Teacher Eligiblity Test Material-2013
தமிழ்நாடு ஆசிரியர் தகுதி தேர்வு முக்கிய குறிப்புகள் -2013


வகுப்பு 1 முதல் 8ம் வகுப்பு வரையிலான குறிப்புகள்

                                                                     இவ்வினாத்தாளில் ஆங்கில பகுதியில் இடம்பெற்றுள்ள  30 வினாக்களை  தென்காசி மேலகரத்தைச் சேர்ந்த  மாரியப்பன் என்பார் தயார் செய்து உதவியுள்ளார். ஆங்கிலத்திற்காகவே அவரால் நிர்வகிக்கப்படும் தளத்தைப் பார்வையிட்டுப் பயன்பெறவும் அவரைத் தொடர்பு கொள்ளவும் www.onlyenglish.webs.com இதில் அழுத்துங்கள்.


                                                                     இவ்வினாத்தாளில் ஆங்கில பகுதியில் இடம்பெற்றுள்ள  30 வினாக்களை  தென்காசி மேலகரத்தைச் சேர்ந்த  மாரியப்பன் என்பார் தயார் செய்து உதவியுள்ளார். ஆங்கிலத்திற்காகவே அவரால் நிர்வகிக்கப்படும் தளத்தைப் பார்வையிட்டுப் பயன்பெறவும் அவரைத் தொடர்பு கொள்ளவும் onlyenglish.webs.com 
இதில் அழுத்துங்கள்.
TET EXAM STUDY MATERIALTET - MATERIAL - 01

இது ஏற்கனவே  பாட வாரியாக தனித்தனியாக வெளியிடப்பட்டவற்றின் ஒட்டுமொத்த தொகுப்பாகும். தனித்தனியாக DOWNLOAD செய்து பயன்படுத்தியவர்களுக்கு ஒட்டு மொத்தமாக ஒரே தொகுப்பாகத் தேவைப்பட்டாலும், இதுவரை DOWNLOAD செய்யாமல் இப்போது புதிதாக DOWNLOAD செய்பவர்களும் இதை DOWNLOAD செய்து பயன்பெறலாம். இதில் கல்வி உளவியல் ( D.T.ED Old & New Syllabus ) தமிழ் ( I to V  & VIII ),  அறிவியல் ( I to VIII ), சமூக அறிவியல் (III to V ) ஆகிய பாடங்களும் ENGLISH METHODOLOGY பாடமும், ஐந்து மாதிரி தேர்வுத்தாள்களும் உள்ளன. மொத்த பக்கங்கள் 198. PDF FILE இன் அளவு 2.83MB.

SOCIAL SCIENCE - V STD

( TET - MATERIAL - 01 இல்ஐந்தாம் வகுப்பு சமூக அறிவியல் பாடம் விடுபட்டுள்ளதால் தற்போது இங்கு தனியாகக் கொடுத்துள்ளேன். சுட்டிக்காட்டியவருக்கு நன்றி. மொத்த பக்கங்கள் 13. PDF இன் அளவு 696 KB.)TET - MATERIAL - 02

இது முழுமையாக இணையத்தில் தேடித் தொகுத்ததாகும். இதில் கணிதம் தவிர பிற பாடங்கள் உள்ளன. மொத்த பக்கங்கள் 177. PDF FILE இன் அளவு 1.89MB.MATHS - STUDY MATERIAL 

இது ஒரு சிறப்பிதழில் வெளிவந்தது. இதில் கணித கருத்துக்களும், வினாக்களும், அதற்கான விடைகளை முழுமையான விளக்கத்துடனும்  கொடுத்துள்ளனர். அனைவரும் இதனைப் பயன்படுத்தும் பொருட்டு Scan  செய்து இங்கு பதிவேற்றியுள்ளேன். மொத்த பக்கங்கள் : 50, PDF இன் அளவு 11.6 MB.TNTET STUDY MATERIAL

TET EXAM க்கு Study Material சிலர் கேட்கிறார்கள். I முதல் X வரையிலான சமச்சீர் பாடப்புத்தகங்களை விடச் சிறந்த material ஏதும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. TET தேர்வு எழுத தயாராக இருக்க வேண்டியவர்கள் சமச்சீர் புத்தகங்களை முழுமையாக வாசியுங்கள். நடைமுறை வாழ்க்கையோடு தொடர்பு படுத்தி புத்தகங்களை வாசித்தாலே நீண்ட நாள் அது நினைவிலிருக்கும். TET EXAM இல் கேட்கப்படும் கேள்விகள் Multiple Choice Questions களாக இருப்பதனால் அதற்கான விடைகளை நினைவு கூர்ந்தாலே போதுமானது. எனவே பாடங்களை மனப்பாடம் செய்ய வேண்டியதில்லை. புரிந்து கொண்டாலே போதுமானது.

இதையும் தாண்டி Material வேண்டும் என்பவர்களுக்கு இதுவரை தொகுத்தவற்றை கீழே கொடுத்துள்ளேன் அதை Download செய்து வாசிக்கலாம். இதில் 1 முதல் 5 வகுப்புகளுக்கான அனைத்து பாடங்களும் 6 முதல் 8 வரைக்குமான அறிவியல் பாடங்கள் மட்டும் உள்ளன. இவையாவும் கடந்த  TET  தேர்வுகாக தயார் செய்யப்பட்டவை. TET வினாக்கள் பாடத்திட்டத்தின் அமையுமென்பதை இப்பொழுது உறுதியாக சொல்வதற்கில்லை. எனவே இது பயன்படுமா என்பதை சிந்தித்த பின்  Download செய்யுங்கள். இல்லையேல் உங்கள் நேரத்தை இதில் செலவிடாமல் பாடப்புத்தகங்களைப் படியுங்கள்.


வேறு ஏதேனும்  TET தொடர்பாக ஏதேனும் சொல்வதாக இருந்தாலோ அல்லது கேட்பதாக இருந்தாலோ napoos@ymail.com க்கு Mail பண்ணுங்கRate cutter போட்டிருந்தால் Idea:8608225854 / Aircel: 9659966192 க்கு Call பண்ணுங்க.